நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டது..?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.;

Update: 2022-04-04 16:33 GMT
கோப்புப் படம்
சென்னை,

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரச்சினை ஏற்பட்டதாக தன்னுடைய டுவிட்டரில் கூறியிருந்தார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா இல்லை முடக்கப்பட்டுள்ளதா என்று அதில் அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவில், 'எனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது அல்லது முடக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இந்த பிரச்சனையை தீர்க்கவும்' என்று கூறி இன்ஸ்டாகிராம் டுவிட்டரை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கு செயல்பட தொடங்கியதாக கூறியுள்ளார். 'வேகமாக சரிசெய்த இன்ஸ்டாகிராமிற்கு நன்றி. இப்போது என்னுடைய கணக்கு மீண்டும் செயல்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக நடிகைகள் அம்ரிதா ஐயர், காயத்ரி ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்