அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் படத்திற்கு கிடைத்த யு/ஏ சான்று

இயக்குனர் சை.கௌதமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.

Update: 2023-05-22 16:38 GMT

கடந்த 2019-ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படம் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் சை.கௌதமராஜ். இவர் தற்போது 'கழுவேத்தி மூர்க்கன்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படத்தின் டிரைலரை படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளதாக படக்குழ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதனை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 'கழுவேத்தி மூர்க்கன்' திரைப்படம் வருகிற மே 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்