காதலிக்க நேரமில்லாமல் சுற்றும் ஜெயம் ரவி

நடிகர் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது.;

Update:2023-11-30 23:50 IST
காதலிக்க நேரமில்லாமல் சுற்றும் ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 'இறைவன்', 'சைரன்' போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி, 'வணக்கம் சென்னை', 'காளி', 'பேப்பர் ராக்கெட்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்த கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் வினய், யோகிபாபு, லால், ஜான் கெக்கன், லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். கவாமிக் யூ ஆரி ஒளிப்பதிவு செய்ய லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'காதலிக்க நேரமில்லை' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்