நாமக்கல் எம்.ஜி.ஆரின் புதிய படம்

‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’ படத்தின் பெயரை தனது அடுத்த படத்துக்கு பயன்படுத்தப்போவதாக நாமக்கல் எம்.ஜி.ஆர். சொல்கிறார்.

Update: 2022-06-05 10:13 GMT

எம்.ஜி.ஆரை போன்ற தோற்றம் கொண்ட நாமக்கல் எம்.ஜி.ஆரின் சொந்த பெயர் சுப்பிரமணி. சொந்த ஊர் நாமக்கல். எம்.ஜி.ஆரை போன்ற முக அமைப்புக்காக பல லட்சங்கள் செலவு செய்து காது மற்றும் தாடைப்பகுதியில் 'ஆபரேசன்' செய்து கொண்டாராம்.அதன் பிறகே 'உழைக்கும் கைகள்' படத்தில் நடித்து இருக்கிறார். படம் ஒரு வாரமாக ஓடிக்கொண்டிருப்பதில் நாமக்கல் எம்.ஜி.ஆருக்கு உற்சாகம். அடுத்து, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற பெயரில் எம்.ஜி.ஆரின் லட்சிய படத்தை எடுக்கப்போவதாக கூறுகிறார். இதற்காக 30 நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்போவதாக சொல்கிறார்.

1972-ல் எம்.ஜி.ஆர். நடித்து தயாரித்து இயக்கி வெளிவந்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்து, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' என்ற படத்தை எடுக்கப்போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். ஆனால் அவர் தனி கட்சி தொடங்கி முதல்-அமைச்சர் ஆகிவிட்டதால், 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' படத்தை எடுக்க முடியவில்லை.எனவே அந்த பெயரை தனது அடுத்த படத்துக்கு பயன்படுத்தப்போவதாக நாமக்கல் எம்.ஜி.ஆர். சொல்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்