படப்பிடிப்பை தொடங்கும் விடாமுயற்சி படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்

அஜித் தற்போது 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

Update: 2023-06-06 16:48 GMT

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் 'விடாமுயற்சி' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'விடாமுயற்சி' திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் இறுதியில் புனேவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்