தோட்டா தெறிக்கும் ஆக்ஷன் படம்.. கூல் லுக்கில் மஞ்சு வாரியர்

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர்.எக்ஸ் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

Update: 2023-06-21 17:53 GMT

விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சுமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மனு ஆனந்த் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் (MrX) படத்தை இயக்குகிறார்.

பிரின்ஸ் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மிஸ்டர்.எக்ஸ் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மலையாள நடிகையான மஞ்சு வாரியர் இதற்குமுன்பு தமிழில் தனுஷுடன் அசூரன், அஜித்துடன் துணிவு படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆர்யாவுடன் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்