யோகி பாபு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்' போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதைத்தொடர்ந்து, யோகிபாபு, நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் படம் ஒன்றில் நடிக்கிறார்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ் குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு 'லோக்கல் சரக்கு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் போஸ்டரை நடிகர் சூரி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார்.
Here is the Tittle & First Look Of Actor / Dance Master @immasterdinesh & Actor @iYogiBabu #LOKALSARAKKU Directed By #SPRajKumar & Produced By #VRSuwaminathan & #Rajesh #DISCOVERSTUDIOS pic.twitter.com/MNJhFLCM0K
— Actor Soori (@sooriofficial) July 30, 2022