விஜய் நடிக்கும் 'கோட்' படத்தின் போஸ்ட் புரொடக்சன் தொடங்கியது

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தொடங்கியதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-05-14 09:22 GMT

சென்னை,

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது மீண்டும் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக நடிகர் விஜய்  கடந்த வாரம் வெளிநாடு புறப்பட்டுச் சென்றார். மேலும் அமெரிக்காவில் நடந்து வரும் 'கிராபிக்ஸ்' பணிகளை பார்வையிட இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அங்கு சென்றுள்ளனர்.

'கோட்' படம் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார் அதில் 'கோட் போஸ்ட் புரொடக்சன் 'பிகின்ஸ்' என்று வைத்து பகிர்ந்துள்ளார். 

மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசைவெளியீடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்