சிம்புவின் வெந்து தணிந்தது படம் எப்படி உள்ளது...! பிரபலங்கள் வாழ்த்து

சிம்புவின் வெந்து தணிந்தது படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2022-09-15 07:41 GMT

சென்னை

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக, சிம்பு - கவுதம் மேனன் - ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இணைந்து ஒன்றாக பணிபுரிந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. ஆகையால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கத்து உள்ளன.

இது எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய அக்னி குஞ்சொன்று கண்டேன் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சித்தி இதானி ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. இதையடுத்து வெந்து தணிந்தது காடு படத்திற்கு பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் முதல் காட்சி இன்று அதிகாலை திரையிடப்பட்டது. அப்போது, கோயம்பேட்டில் உள்ள தனியார் திரையரங்கு வாசலில் குவிந்த சிம்புவின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், அவரது கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Full View

'வெந்து தணிந்தது காடு' படம் எப்படி இருக்கு? - ரசிகர்கள் கருத்து 

Full View

வெந்து தணிந்தது காடு குறித்து நிறைய நல்ல செய்திகளைக் கேட்க முடிகிறது. படம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன், என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.


சிம்புவுக்கும், கவுதம் மேனனுக்கும் நடிகர் சூரி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


வெந்து தணிந்தது காடு படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


கடின உழைப்பும் நம்பிக்கையும் என்றும் தோற்பதில்லை நண்பா என சிம்புவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் நடிகர் மஹத்.

வெந்து தணிந்தது காடு படக்குழுவுக்கு நடிகர் கிருஷ்ணா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

என்னுடைய சகோதரர் சிம்புவுக்கு இதயத்திலிருந்து வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என இசையமைப்பாளர் எஸ்.தமன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்