'கோட்' படத்தில் நடிக்கும் வெங்கட் பிரபு - வெளியான தகவல்

'கோட்' படத்தில்' வெங்கட் பிரபு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-04-10 06:52 GMT

image courtecy:instagram@venkat_prabhu

சென்னை,

லியோ வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் "தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்"(கோட்) என்ற படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கேரள ரசிகர்களின் வரவேற்பு மிக பிரம்மிப்பாக இருந்தது. பின்பு நான்கு நாட்கள் படப்பிடிப்பு முடித்தவுடன் சென்னை திரும்பினார் விஜய்.

தற்போது கோட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷிய தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடித்தால் அவர் விஜய்யுடன் நடிக்கும் இரண்டாவது படமாக கோட் அமையும். முன்னதாக 2006-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த 'சிவகாசி' படத்தில் வெங்கட் பிரபு நடித்திருந்தார்.

இது மட்டுமல்லாமல் மேலும் பல படங்களிலும் வெங்கட்பிரபு நடித்திருக்கிறார். முன்னதாக, இப்படித்தான் என்னுடைய நாள் 'என் அன்பு தயாரிப்பாளர்களுடன் தொடங்கும்' என நகைச்சுவையான தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்