வரலட்சுமியின் புதிய படம்

வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிக்கும் புதிய படம் `கொன்றால் பாவம்'.;

Update:2022-11-25 09:43 IST
வரலட்சுமியின் புதிய படம்

 இதில் ஈஸ்வரி ராய், சார்லி, மனோபாலா, ஜெயகுமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், டி.எஸ்.ஆர்.ஶ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி தங்கதுரை உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை தயாள் பத்ம நாபன் டைரக்டு செய்கிறார். ஶ்ரீமோகன் ஹபுவின் கன்னட நாடகத்தை மையமாக கொண்டு இந்தப் படம் தயாராகிறது. கன்னடம் மூலக்கதையாக இருந்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் தயாள் பத்மநாபனே இயக்குகிறார். ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இசை.சாம்.சி.எஸ். ஒளிப்பதிவு:ஆர்.செழியன்.

Tags:    

மேலும் செய்திகள்