வைரமுத்து பாடல்

‘மாவீரா’ படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி உள்ளார்.;

Update:2022-11-11 10:28 IST

டைரக்டர் கவுதமன் கதாநாயகனாக நடித்து இயக்கும் 'மாவீரா' படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதி உள்ளார். பத்தே நிமிடத்தில் தயாரான அந்த பாடல்:-

'பட்டாம் பூச்சிக்கு பட்டுத்துணி போட்டது போல, சிட்டாஞ்சிட்டுக்கு சேலைக்கட்டி விட்டது யாரு? சீனிக்கட்டியில செலை ஒன்னு செஞ்சு வச்சது போல எட்டா ஒயரத்தில் எச்சி ஊற விட்டது யாரு. வன்னித் தமிழா வாய்யா, உனக்கு வாச்சப் பொருளைத் தாயா, பச்ச முத்தம் ஒன்னு கொடுத்தா, பற்றிக்கொள்வேன் தீயா, அடி வஞ்சிக்கொடியே வாடி, வளர்த்த பொருளத்தாடி, பாசத்த உள்ள வச்சு வேசங்கட்டி வந்தவளே வெறும் வாய மெல்லுறியே, மாவீரன் மண் காக்க, மானமுள்ள பெண் காக்க, அஞ்சாறுப் புலிக்குட்டி அவசரமா வேண்டுமடி' இப்படி பாடல் நீள்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்