1990-களில் பிரபலமாக இருந்த டி.வி. நடிகர் - நடிகைகள் ஒரே இடத்தில் கூடி, விருந்து சாப்பிட்டார்கள்

1990-களில் தொலைக்காட்சி தொடர்களில் பிரபலமாக இருந்த டி.வி. நடிகர்-நடிகைகள் சமீபத்தில் ஒரே இடத்தில் கூடி, விருந்து சாப்பிட்டார்கள். அன்பை பகிர்ந்து கொண்டார்கள்.;

Update: 2022-08-21 10:20 GMT

20 வருட கால நட்பு ஒன்றாக சங்கமிக்க, சில நட்சத்திரங்கள் இன்னும் வேறு சில துறைகளிலும் தங்களுடைய முத்திரையை பதித்து இருந்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல் ஒருவர் மீது ஒருவர் பாசத்தை பகிர்ந்து கொண்டார்கள். எல்லோரும் ஒரே நிறத்தில் உடையணிந்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள்.

கவுசிக், தீபக், அப்சர், கவுதம் சுந்தர்ராஜன், விச்சு, சசி, சில்பா, அம்மு ராமச்சந்திரன், வெங்கட், நீலிமா இசை, பானு பிரகாஷ், போஸ் வெங்கட், சோனியா போஸ் வெங்கட், ரிஷி, அஞ்சு, கணேஷ்கர், ஆர்த்தி கணேஷ்கர், விஜய் ஆதிராஜ், கோல்டன் சுரேஷ், கமலேஷ் சிலஜா செட்லோர், கெ.எஸ்.ஜி.வெங்கடேஷ், நிர்மலா ஷ்யாம், பூஜா, ஷ்யாம், கணேஷ், ரிந்தியா, தேவி கிருபா, ஸ்வேதா பாரதி, ரோஜாஸ்ரீ, ஹரீஷ், ஆதித்யா, ஈஸ்வர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு, இனி ஒவ்வொரு வருடமும் தொடரும் என்று அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்