கணவருடன் ஓட்டலில் தங்கிய நடிகையை செருப்பால் அடிக்க பாய்ந்த மனைவி
கணவருடன் ஓட்டலில் தங்கிய நடிகையை செருப்பால் அடிக்க பாய்ந்த 3 -வது மனைவியை போலீசார் தடுத்தனர்.
தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல கன்னட நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் நரேஷை காதலித்து திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாக தகவல் பரவியது. நரேஷும் 2 முறை திருமணமாகி விவாகரத்து ஆனவர். 3-வதாக ரம்யா ரகுபதி என்பவரை மணந்து அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். நரேஷை நான் பிரிவதற்கு காரணம் பவித்ராதான் என்றும், நரேஷுக்கும், தனக்கும் இன்னும் விவாகரத்து கிடைக்கவில்லை என்றும் ரம்யா ரகுபதி கூறியிருந்தார். இந்த நிலையில் நரேஷும், பவித்ராவும் மைசூருவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் அறிந்து அவர்கள் தங்கி இருந்த அறையை ரம்யா ரகுபதி முற்றுகையிட்டு ரகளை செய்தார். அறை கதவை தட்டி கூச்சல் போட்டார். தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நரேஷையும், பவித்ராவையும் அறையில் இருந்து வெளியே பாதுகாப்பாக அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க ஆவேசமாக பாய்ந்தார். போலீசார் குறுக்கிட்டு அடிக்க விடாமல் தடுத்தனர்.
செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நரேஷ் விசில் அடித்து கேலி செய்தபடி சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.