மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர் வெளியானது..!

மனோஜ் பாரதிராஜா இயக்கியுள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Update: 2023-09-07 00:58 GMT

சென்னை,

1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் இயக்குனர் சுசீந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பள்ளி பருவத்து காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.Full View

Tags:    

மேலும் செய்திகள்