'தலைவர் 171 பட டைட்டில் டீசர் தயார்' - அனிமல் பட டைரக்டர் தகவல்

அனிமல் பட டைரக்டர் சந்தீப் ரெட்டி, தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-09 08:09 GMT

சென்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.

இந்த படத்துக்கு தற்காலிகமாக 'தலைவர் 171' என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் அனிமல் பட டைரக்டர் சந்தீப் ரெட்டி, தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாராகிவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். இதனை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தயாரிக்கும் பணி முடிந்துவிட்டது. நான் ஏற்கனவே டைட்டில் டீசரை பார்த்துவிட்டேன். இதனை படக்குழு விரைவில் வெளியிடும். படம் குறித்த மற்ற தகவல்களுக்காக நாம் காத்திருக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

'தலைவர் 171' படத்தின் டைட்டில் டீசர் வரும் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்