'தி பேமிலி மேன்' இயக்குனர்களுடன் மீண்டும் இணைந்த சமந்தா

இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீ.கே இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் நடிகை சமந்தா இணைந்துள்ளார்.;

Update: 2023-02-02 17:02 GMT

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'யசோதா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சமந்தா 'சாகுந்தலம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் சில மாதங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். தற்போது சமந்தா மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் சமந்தா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீ.கே இயக்கும் 'சிட்டாடல்' என்ற வெப் தொடரில் இணைந்துள்ளார். இதனை நடிகை சமந்தாவின் புதிய தோற்றத்தை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீ.கே, சமந்தா நடிப்பில் வெளியான 'தி பேமிலி மேன்' தொடரை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்