கவர்ச்சிக்கு தாவிய ராஷி கன்னா

சினிமாவில் நிலைக்க முடியும் என்று அவருக்கு சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என ராஷி கன்னா முடிவெடுத்திருக்கிறார்.;

Update:2022-08-21 16:21 IST

'இமைக்கா நொடிகள்' மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷி கன்னா. இதைத்தொடர்ந்து 'அயோக்யா', 'அடங்க மறு', 'சங்கத்தமிழன்', 'துக்ளக் தர்பார்', 'அரண்மனை-3' போன்ற படங்களில் நடித்துள்ளார். தனுசுடன் அவர் நடித்த 'திருச்சிற்றம்பலம்' தற்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இது தவிர ஏராளமான தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அவர் நடித்துள்ளார். இதுவரை கதாநாயகர்களுடன் 'டூயட்' பாடி வந்த ராஷி கன்னா, கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமலேயே இருந்து வந்தார். பல வாய்ப்புகள் வந்த போதும் அதனை மறுத்தார். இதனால் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

தற்போது கவர்ச்சி பாதையையும் கடந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று அவருக்கு சிலர் ஆலோசனை வழங்கி உள்ளனர். இதனால் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என ராஷி கன்னா முடிவெடுத்திருக்கிறார்.

இதன் முன்னோட்டமாக தனது கலக்கல் கவர்ச்சி படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இந்த படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இனி ராஷி கன்னாவின் இன்னொரு முகத்தை பார்க்க முடியும் என்பதால் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்