நடிகர் தனுஷ் குறித்து உடைத்து பேசிய ராதாரவி
நடிகர் ராதாரவி நடிகர் தனுஷ் குறித்து உடைத்து பேசியிருக்கிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர். இவர் பவர் பாண்டி, ராயன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய ராயன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சூழலில், தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர் ராதா ரவி நடிகர் தனுஷ் குறித்து உடைத்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'தனுஷ் சார் மீது போய் தடை போட்டுள்ளார்கள். அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் அனைவருக்கும் உதவி செய்பவர். அவர் படம் இயக்கி அந்த படம் நன்கு ஓடிவிட்டது என்பதற்காக எல்லோரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது. நமக்கு நல்ல தயாரிப்பாளர் கிடைக்காமல் போய்விடுவார்,' என்றார்