ரஜினி படத்துடன் மோதும் 'பொன்னியின் செல்வன் 2'?

ரஜினியின் ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update: 2022-10-24 11:19 GMT

பெரிய பட்ஜெட் படங்களான ரஜினியின் ஜெயிலர், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம், விஜய்யின் வாரிசு, அஜித்குமாரின் துணிவு ஆகிய படங்களின் ரிலீஸ் தேதிகள் இணையதளத்தில் கசியத்தொடங்கி உள்ளன. வாரிசு, துணிவு படங்கள் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இரண்டும் பெரிய நடிகர்கள் படங்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை சரிபாதியாக பிரித்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்றும் இதனால் வசூல் பாதிக்கலாம் என்றும் வினியோகஸ்தர்களுக்கு கவலை உள்ளது.

இந்த நிலையில் ரஜினியின் ஜெயிலர் படமும் பொன்னியின் செல்வன் 2-ம் பாகமும் ஒரே நாளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு படங்ளையும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெற்றி பெற்றதால் இரண்டாம் பாகத்தையும் அதிக தியேட்டரில் திரையிட முயற்சிகள் நடக்கின்றன. ஜெயிலர் ரஜினி படம் என்பதால் அதற்கும் கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு படங்களும் ஒன்றாக வெளியானால் வசூல் பாதிக்கும் என்றும் எனவே ஒரு படத்தை இன்னொரு தேதிக்கு தள்ளிவைக்கலாம் என்றும் தியேட்டர் அதிபர்கள் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து ஷங்கர் இயக்கி உள்ள படத்தையும் தமிழ், தெலுங்கு மொழிகளில் புத்தாண்டில் வெளியிட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்