விஜய் சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஏஸ் திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.;
கடந்த 2018-ம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாத நிலையில், 5 ஆண்டுகள் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால், அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கியது. மொத்த படப்பிடிப்பும் மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் அனைத்து காட்சிகளிலும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ருக்மிணி, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ஜஸ்டின் பிரபாகரன் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.
ஒரு சில காரணங்களால், இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. அண்மையில் இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. படத்திற்கு ஏஸ் என்று டைட்டில் வைத்து டீசரையும் வெளியிட்டனர். இந்நிலையில், ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மிணி, யோகி பாபு ஆகியோரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.