'வேட்டையன்' படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியீடு

ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update: 2024-10-09 15:41 GMT

சென்னை,

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் முதல் பாடலான 'மனசிலாயோ' பாடலும், இரண்டாவது பாடலான 'ஹண்டர் வண்டார்' பாடலும் வெளியாகி வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்த போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படம், என்கவுன்டர் தொடர்பான ஆக்சன் படமாக உருவாகி உள்ளது.

'வேட்டையன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்டையன் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த இரு தினங்களுக்கு முன்பே தொடங்கியது.

இப்படம் நாளை வெளியாக உள்ளநிலையில், தற்போது இந்த படத்தின் புதிய புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. இது குறித்த பதிவை தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்