சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர போதைபழக்கத்திற்கு ரியா சக்ரவர்த்தி உடந்தையாக இருந்தார்...!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தீவிர போதை பழக்கத்திற்கு உடந்தையாக இருந்ததாக ரியா சக்ரவர்த்தி மீது போதைப்பொருள் தடுப்பு பிரிவி குற்றம் சாட்டியுள்ளது.;

Update: 2022-07-13 06:00 GMT

மும்பை

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ந்தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்தார். இதை தொடர்ந்து பாலிவுட் சினிமா துறையில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகி போதைப்பொருள் தடுப்பு பிரிவி விசாரணையை தொடங்கி தற்போது வரை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை பல முக்கிய பிரபலங்கள் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் வழக்கில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் கழித்து மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் பெற்றார். ரியாவைத் தவிர, அவரது சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி மற்றும் பலர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.அவர்களில் பெரும்பாலோர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான போதைப்பொருள் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை அறிக்கையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக் உள்ளிட்ட குற்றவாளிகளிடமிருந்து பலமுறை கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றம் சாட்டப்பட்ட 35 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

குற்றப்பத்திரிகையில் கூறபட்டு இருப்பதாவது:-

குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த மார்ச் 2020 முதல் டிசம்பர் வரை ஒருவராகவோ அல்லது குழுக்களாகவோ இணைந்து பாலிவுட் மற்றும் உயர் சமூகத்தில் இருக்கும் நபர்களிடம் போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து உள்ளார். மேலும் கஞ்சா, சரஸ், கோகோயின், சைக்கோட்ரோபிக் போன்ற போதை பொருட்களை உட்கொண்டார்.

குற்றம் சாட்டப்பட்ட சாமுவேல் மிராண்டா, ஷோயிக், திபேஷ் சாவந்த் மற்றும் பலரிடமிருந்து ரியா சக்ரோவர்த்தி பலமுறை கஞ்சா பெற்று, அதனை மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திடம் வழங்கியுள்ளார்.

இதன்மூலம், கடந்த மார்ச் 2020 முதல் ரியா சக்ரவர்த்தி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு வழங்கியது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ரியாவின் சகோதரர் ஷோக் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளார். என கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்