'கல்கி 2898 ஏ.டி' படத்தின் புஜ்ஜி டீசர் வீடியோ

‘கல்கி 2898 ஏ.டி’ படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 -ம் தேதி வெளியாகவுள்ளது.;

Update: 2024-05-20 09:15 GMT

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து பெரிய நடிகராக உயர்ந்தார். அதனை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தன. இந்த படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கத்தில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


கல்கி 2898 ஏ.டி, படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோவில், 2020 -ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22-ம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

சமீபத்தில் 'கல்கி 2898 ஏ.டி' படத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.


நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் 'கல்கி 2898 ஏ.டி' இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27-ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்