'ஜிகர்தண்டா -2' படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியானது..!

'ஜிகர்தண்டா -2' திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Update: 2023-09-09 13:54 GMT

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு மதுரையை களமாக கொண்டு உருவாகிய படம் 'ஜிகர்தண்டா'. சித்தார்த் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் லட்சுமி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா நடித்திருந்தார். இந்த படத்துக்காக 2014-ம் ஆண்டின் தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார்.

8 வருடங்களுக்கு பிறகு ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்த படம் வருகிற தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜிகர்தண்டா -2' திரைப்படத்தின் டீசர் வருகிற 11-ம் தேதி நண்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்