பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகிறாரா ஜி.வி. பிரகாஷ்?

ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update:2024-03-19 11:02 IST

சென்னை,

அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன. இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளதாகவும் இந்தி மற்றும் தமிழில் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்