'ஜிகர்தண்டா 2'-ம் பாகத்தில் லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா

‘ஜிகர்தண்டா 2’-ம் பாகத்தில் லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள்.;

Update: 2022-12-13 03:24 GMT

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா. கருணாகரன், லட்சுமி மேனன், ஆகியோர் நடித்து கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா'படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பினால் தெலுங்கில் 'கட்டலகொண்டா கணேஷ்' என்ற பெயரிலும் இந்தியில் 'பச்சன் பாண்டே' என்ற பெயரிலும் 'ஜிகர் தண்டா' படம் ரீமேக் ஆனது. கன்னடத்திலும் 'ரீமேக்' செய்தனர். ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் தற்போது 'ஜிகர்தண்டா 2' படத்தின் சிறிய டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் ஒரு குடிசையில் லாரன்ஸ் இரும்பு அடித்துக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தில் இருப்பது போன்றும் அவருடன் மோத எஸ்.ஜே. சூர்யா துப்பாக்கியுடன் வந்து நிற்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதில் லாரன்ஸ் கதாநாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்