இருட்டு அறையில் அமர்ந்து அழுதேன் - நடிகை மம்தா மோகன்தாஸ்

Update:2023-02-22 08:41 IST
இருட்டு அறையில் அமர்ந்து அழுதேன் - நடிகை மம்தா மோகன்தாஸ்

விஷால் ஜோடியாக 'சிவப்பதிகாரம்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மம்தா மோகன்தாஸ். 'குரு என் ஆளு', 'தடையற தாக்க', 'எனிமி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சினிமா மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது மம்தா மோகன்தாஸ் புற்றுநோயில் சிக்கினார். பின்னர் சிகிச்சைப்பெற்று நோய் பாதிப்பில் இருந்து மீண்டார்.

இந்த நிலையில் மம்தா மோகன்தாஸ் அளித்துள்ள பேட்டியில், "எனக்கு புற்றுநோய் வந்தபோது எனது சினேகிதர்களிடம் தான் முதலில் பிரச்சினையை பற்றி தெரிவித்தேன் அவர்கள் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். ஆனால் இந்த நோய் வந்ததை அறிந்து தனிமையில் இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதேன். எப்போதும் கேமரா முன்னால் இருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் அவதிப்பட்டேன்.

செத்து விடுவோமோ என பயந்தேன். அதனால் தான் இந்த பிரச்சினையை அனைவருக்கும் பகிரங்கமாக தெரியப்படுத்தினேன். அதன் பிறகு மனது கொஞ்சம் லேசானது. பெரிய பாரத்தை இறக்கி விட்டது போல் உணர்ந்தேன். யாராவது என் உடல் மீது இந்த மச்சங்கள் என்ன என்று கேட்டால் எனது இன்ஸ்ட்டாவை பாருங்கள் என்று முகத்தில் அறைந்த மாதிரி சொல்லி விடுகிறேன்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்