ஹிரித்திக் ரோஷன் படத்தின் 'ஷேர் குல் கயே' என்ற பாடல் வெளியானது

பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடனம் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.;

Update:2023-12-15 22:51 IST

மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகையாக வலம் வருபவர்கள், ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோன். தற்போது இருவரும் இணைந்து 'பைட்டர்' படத்தில் நடித்துள்ளனர் . இவர்களுடன் இணைந்து நடிகர் அணில் கபூரும் நடித்துள்ளார் .இந்த படத்தை வார், பதான் மற்றும் பேங் பேங் போன்ற படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார் . அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி பைட்டர் படத்தை வெளியிட இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது பைட்டர் படத்தின் டீசர்- அதிரடி ஆக்ஷன் மூலம் ஏற்கனவே படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் 'ஷேர் குல் கயே' என்ற பாடலை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த பாடல் முழுக்க ஹிரித்திக் ரோஷனின் நடனம் இடம்பெற்று இருப்பதால் அதிவேகமாக வைரல் ஆகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்