'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள 'ஹாட் ஸ்பாட் 2' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.;
சென்னை,
திரைப்பட இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஜீ.வி பிரகாஷ் நடித்த 'அடியே' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'ஹாட் ஸ்பாட்' என்ற படத்தினை இயக்கினார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர் மற்றும் சோபியா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அதனை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் தயாரித்துள்ளார்.
இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
தற்போது, இது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த படத்தின் இரண்டாம் பாகமான 'ஹாட் ஸ்பார் 2' படத்திற்கான புரோமா வீடியோவை நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.