'அற்புதங்களுக்காக காத்திருக்க வேண்டாம்...அதை நாம்தான் உருவாக்க வேண்டும்' - தமன்னா
தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறி உள்ளது.;

சென்னை,
16 வயதிலேயே சினிமாவுக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக உயர்ந்திருப்பவர் தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.
இவரும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வந்தநிலையில், சமீபத்தில் இருவரும் பிரிந்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தமன்னா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பேசுபொருளாக மாறி உள்ளது.
அந்த பதிவில், "வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். நாம்தான் அற்புதங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டு உள்ளார்.
தற்போது தமன்னா, 'ஒடேலா 2' படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த 2022-ம் ஆண்டு அசோக் தேஜா இயக்கத்தில் வெளியான 'ஒடேலா ரெயில்வே ஸ்டேஷன்' படத்தின் 2-ம் பாகமாகும்.