கண்ணப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கரின் பைரவம்?

அதிதி ஷங்கரின் ’பைரவம்’ அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.;

Update:2025-03-19 11:18 IST
Kannappa’s Clash With Bhairavam!

சென்னை,

இவர் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் 'மாவீரன்' படத்தில் நடித்திருந்தார். நடிப்பு மட்டும் இல்லாமல் விருமன் படத்தில் 'மதுர வீரன்' மற்றும் 'மாவீரன்' படத்தில் 'வண்ணாரப்பேட்டை' பாடல்களையும் பாடி ரசிகர்களை ஈர்த்தார்.

தற்போது இவர், தமிழைத்தொடர்ந்து தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார். விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்திற்கு 'பைரவம்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படம் அடுத்த மாதம் 25-ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதேநாளில்தான், மோகன்லால், பிரபாஸ், விஷ்ணு மஞ்சு, அக்சய் குமார் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கண்ணப்பா படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்