ஸ்வீட் ஹார்ட் படத்தின் 'ஒருத்தி' வீடியோ பாடல் வெளியானது
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் நடித்துள்ள படத்தின் 'ஒருத்தி' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.;

சென்னை,
கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் ஹீரோவாக கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரியோ ராஜ். அதனை தொடர்ந்து 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ' ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இந்தநிலையில் இவரது நடிப்பில் கடந்த 14-ந் தேதி 'ஸ்வீட் ஹார்ட்' படம் வெளியானது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். திரையரங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் ரூ. 5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஒருத்தி' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.