'எம்புரான்' படத்தின் வெற்றியைப் பொறுத்தே மூன்றாம் பாகம் எடுக்கப்படும் - பிருத்விராஜ்
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது.;

சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. அதனை தொடர்ந்து தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகமான 'எல் 2 எம்புரான்' தயாராகி உள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், மோகன்லால் 'குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். கேம் ஆப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
மோகன்லால் இதுவரை நடித்ததிலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை சாதனை படைத்துள்ளது. அதாவது, 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக நிகழ்ச்சி ஒன்றில் பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கலந்து கொண்டனர். அப்போது எம்புரான் லூசிபர் படத்தின் 3 பாகம் குறித்த தகவலை பிருத்விராஜ் பகிர்ந்தார். அதாவது, எம்புரான் படத்தின் வெற்றியைப் பொறுத்து லூசிபர் மூன்றாம் பாகம் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். அதேபோல, மற்றோரு பேட்டியில் பேசிய பிருத்விராஜ், "மோகன்லால் சார் இந்த படத்தில் 41 நிமிடங்கள் மட்டுமே தோன்றுவார். அது போல தான் இந்த மூன்று படங்களுமே இருக்கும். மோகன்லால் சாரின் கதாபாத்திரத்தை புரிந்து கொள்வது கஷ்டம். ஏனென்றால் முழு நேரமும் அவரைக் காட்டினால் நீங்கள் ஈர்ப்பை இழந்து விடுவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.