ராஜமவுலியின் "எஸ்.எஸ்.எம்.பி 29" படத்தில் பிருத்விராஜ்
நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ், ராஜமவுலி இயக்கும் ‘எஸ்.எஸ்.எம்.பி 29’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.;

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. இவர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் "எஸ்எஸ்எம்பி 29" படத்தில் நடித்து வருகிறார். பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மலையாளத் திரையுலகத்தில் நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒடிஷா மாநிலத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பில் கலந்து கொண்டு பிருத்விராஜ் நடித்துள்ளார். ஆனால், பிருத்விராஜ் இப்படத்தில் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில், எம்புரான் படத்தின் புரோமோஷன் தொடர்பான சமீபத்திய பேட்டி ஒன்றில் அது குறித்து கேட்டபோது, மகேஷ்பாபுவுடன் ஒடிஷாவிற்கு சுற்றுலா சென்று வந்தேன் என்று கூறினார். இருப்பினும் அப்படத்தில் நடித்து வருவதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின் மீடியா சந்திப்பில் அது பற்றி பேசுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பிருத்விராஜ் இயக்கி மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படம் வரும் 27ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.