திகில் கதையில் ஜி.வி.பிரகாஷ்
‘டார்லிங்’ படத்திற்கு பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் கதையம்சம் கொண்ட படமாக `13' அமைந்துள்ளது.;
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று '13'. இதில் டைரக்டர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். `செல்பி' படத்துக்கு பிறகு இருவரும் இப்படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டீசரை வெளியிட்டு உள்ளனர். டீசரில் நிறைய திரில்லர் காட்சிகள் உள்ளன. அதோடு கவுதம் மேனன் `ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது' என்று கதையின் முன்னுரையை சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.'டார்லிங்' படத்திற்கு பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் திகில் கதையம்சம் கொண்ட படமாக `13' அமைந்துள்ளது. ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக் இயக்கத்தில், சித்துகுமார் இசையில், மூவேந்தர் ஒளிப்பதிவில் இந்த படம் தயாராகிறது. படக்குழுவினரை ஹன்சிகா வாழ்த்தி உள்ளார்.