ஒரிஜினலை விட சிறப்பாக அமைந்த டாப் 5 ரீமேக் படங்கள்
பல திரைப்படங்கள ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெறுகின்றன;
சென்னை,
திரையுலகில் பல திரைப்படங்கள் வெளியாகி வேறு மொழியில் அல்லது அதே மொழியில் சில வருடங்களுக்கு பிறகு ரீமேக் செய்யப்படுகின்றன. அவ்வாறு ரீமேக்காகி, ஒரிஜினலை விட நல்ல வரவேற்பை பெற்ற டாப் 5 படங்களை பற்றி தற்போது பார்ப்போம்.
1.தி பேரண்ட் டிராப்
கடந்த 1998-ம் ஆண்டு வெளியான படம் தி பேரண்ட் டிராப். லிட்ஸ்லி லோகன் இயக்கிய இப்படம் கடந்த 1961-ம் ஆண்டு வெளியான தி பேரண்ட் டிராப் படத்தின் ரீ மேக்காகும். இப்படம் ஒரிஜினலை விட சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
2.டூன்
கடந்த 1984-ம் ஆண்டு வெளியான டூன் படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை. ஆனால், ரீமேக்காக கடந்த 2021-ம் ஆண்டு வெளியான டூன் நல்ல வரவேற்பை பெற்றது.
3.தி பிளை
டேவிட் குரோனென்பெர்க் இயக்கிய தி பிளை, 1958-ம் ஆண்டு வெளியான தி பிளை படத்தின் ரீமேக்காகும். ஹாரர் படமான இது ஒரிஜினலை விட நன்கு வரவேற்கப்பட்டது.
4.தி ஜங்கிள் புக்
கடந்த 2016-ம் ஆண்டு ரீ மேக்காக உருவான தி ஜங்கிள் புக் திரைப்படம் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான அதன் ஒரிஜினலை விட ஹிட் அடித்தது.
5.தி டிபார்டட்
மார்டின் ஸ்கார்செஸ் இயக்கத்தில் வெளியான படம் தி டிபார்டட். இப்படம் இன்பெர்னல் அபயர்ஸ் படத்தின் ரீமேக்காகும். தி டிபார்டட் படம் இன்பெர்னல் அபயர்ஸ் படத்தை விட சிறப்பாக அமைந்தது.