ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்கு கோர்ட்டு தடை

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளத்தில் ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.;

Update: 2024-07-22 23:02 GMT

கோப்புப்படம் 

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது மலையாளத்தில் 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஜித்தின் லால் இயக்கி உள்ளார். இதில் நாயகனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இவர் தமிழில் தனுசுடன் 'மாரி 2' படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் எர்ணாகுளத்தை சேர்ந்த டாக்டர் வினித் என்பவர் படத்துக்கு எதிராக கொச்சி முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் படத்தை தயாரிக்க தன்னிடம் ரூ. 3.20 கோடி பெற்று ஏமாற்றி விட்டதாகவும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தை தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்