சிரஞ்சீவி படத்தின் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு
. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ரீதேவி சிரஞ்சீவி என்ற பாடல் நாளை (19.12.2022)அன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். 'வால்டேர் வீரய்யா' திரைப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Juliet - Romeo
— Mythri Movie Makers (@MythriOfficial) December 18, 2022
Laila - Majnu #SrideviChiranjeevi ❤️
This song - Your Playlist ❤️
Rocking Love Melody #SrideviChiranjeevi from #WaltairVeerayya out tomorrow at 4:05PM #WaltairVeerayyaOnJan13th pic.twitter.com/uIHfjYzau6