அனுபமா நடித்துள்ள 'லாக்டவுன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு

'லாக்டவுன்' படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர்.

Update: 2024-06-12 04:20 GMT

சென்னை,

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது 'லாக் டவுன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு என்ஆர் ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளனர். கே.ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார். சமீபத்தில் 'லாக்டவுன்' படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் நடப்பது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'லாக் டவுன்' படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தின் 'லாவா லாவா' என்ற பாடல் இன்று (ஜூன் 12) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ள இந்த பாடலை பிரியா ஜெர்சன் பாடியுள்ளார். 'லாக் டவுன்' திரைப்படம் இந்த மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் 'பரதா' என்ற படத்தில் நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்