வலைத்தளத்தில் அவதூறு பரப்ப நடிகை எதிர்ப்பு

அபிராமிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவுகள் வெளியாகி வந்தன. இதனால் கடுப்பான அபிராமி வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

Update: 2022-09-29 02:08 GMT

தமிழில் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்தவர் அபிராமி சுரேஷ். குபேர ராசி, கேள்வி படங்களிலும் நடித்து இருக்கிறார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார். பாடகியாகவும் இருக்கிறார். பிரபல பாடகி அம்ருதா சுரேஷ் இவரது சகோதரி ஆவார். அபிராமிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் அவதூறு பதிவுகள் வெளியாகி வந்தன. இதனால் கடுப்பான அபிராமி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''எனக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் சைபர் தாக்குதல் நடக்கிறது. என்னைப்பற்றி அவதூறான கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். இது மிகவும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்துவதற்கும் ஒரு எல்லை உள்ளது. வரம்பு மீறுவதை ஏற்க முடியாது. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கான உரிமையை பறிக்கிறீர்கள். மனரீதியாக தொந்தரவு செய்கிறீர்கள். என்னையும், எனது குடும்பத்தினரையும் வலைத்தளங்களில் அவதூறு செய்வதை கடுமையாக எடுத்துக்கொள்வோம். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக்கொள்வேன்" என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்