கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் புகைப்படம் - டுவிட்டரில் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்

நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

Update: 2023-06-18 17:39 GMT

சென்னை,

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகையை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாணவர்களிடம் உரையாற்றிய நடிகர் விஜய், மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் சென்று ஓட்டுக்குப் பணம் வாங்க வேண்டாம் என்று கூற வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மாணவர்கள் அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வரும் நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிட வேண்டும் என்றும் நடிகர் விஜய் அறிவுறுத்தினார்.



Tags:    

மேலும் செய்திகள்