'தி கோட்' பட வெற்றி: மனைவியுடன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரேம்ஜி

'தி கோட்' படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் பிரேம்ஜி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார்.;

Update:2024-09-21 08:38 IST

திருச்செந்தூர்,

லியோவின் வெற்றிக்குப்பிறகு விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் 'தி கோட்'. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'தி கோட்' படம் உலகம் முழுவதும் கடந்த 5ம் தேதி வெளியானது.

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படத்தில் பலர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். தற்போது வரை 'தி கோட்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 413கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றிப்பெற்றுள்ளது. 'தி கோட்' பட வெற்றியையடுத்து, நடிகர் பிரேம்ஜி தனது மனைவி இந்துவுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் பிரேம்ஜிக்கு கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்