'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த நடிகர் அர்ஜுன்

நடிகர் அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.;

Update: 2024-06-16 14:33 GMT

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

வெளிநாட்டில் நடக்கிற கதை இது என்பதால், படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் ஓ.டி.டி. உரிமத்தை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது. 'விடாமுயற்சி' திரைக்கு வந்த பிறகு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.

துணிவு வெளியாகி ஓராண்டைக் கடந்த நிலையில், இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பிலேயே இருப்பதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன், "விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் மீண்டும் அஜர்பைஜானில் துவங்கும் என்றும் 20 - 30 சதவீத படப்பிடிப்பே மீதமுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். தற்போது, நடிகர் அஜித் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

'விடாமுயற்சி' படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.  

Tags:    

மேலும் செய்திகள்