காயத்ரியின் வலைத்தள கணக்கு முடக்கம்
நடிகை காயத்ரியின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர்.;
நடிகர் - நடிகைகள் முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தள பக்கங்களில் கணக்கு தொடங்கி, தாங்கள் நடிக்கும் படங்கள் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களுடனும் நேரடி தொடர்பு வைத்து கலந்துரையாடுகிறார்கள். இந்த கணக்குகளை விஷமிகள் ஊடுருவி முடக்குவதும் அடிக்கடி நடக்கிறது. இரு தினங்களுக்கு முன்பு நடிகர் துல்கர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக அதை மீட்டுவிட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில் தற்போது நடிகை காயத்ரியின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மர்ம நபர்கள் ஊடுருவி முடக்கி உள்ளனர். காயத்ரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘’எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. அதை மீட்கும் பணிகள் நடக்கின்றன. எனவே எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஏதேனும் தகவல்கள் வந்தால் அதை புறக்கணிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். காயத்ரி தமிழில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, புரியாத புதிர், சிதக்காதி, சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.