மகளை கேலி செய்வதை சாடிய அபிஷேக் பச்சன்

இந்தி திரையுலக நட்சத்திர தம்பதிகள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சமீபத்தில் தனது மகள் ஆராத்யாவின் 10-வது பிறந்த நாளை மாலத்தீவில் கொண்டாடினர். மகளை கேலி செய்தவர்களை அபிஷேக் பச்சன் கடுமையாக கண்டித்துள்ளார்.;

Update: 2021-12-04 16:39 GMT
அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அபிஷேக் பச்சன் வெளியிட்டார். ரசிகர்கள் பலரும் ஆரத்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆனாலும் சிலர் ஆராத்யாவையும், அபிஷேக் பச்சன் குடும்பத்தினரையும் சமூக வலைத்தளத்தில் இழிவாக கேலி செய்து பதிவுகள் வெளியிட்டனர். இது பரபரப்பானது. இந்த நிலையில் மகளை கேலி செய்தவர்களை அபிஷேக் பச்சன் கடுமையாக கண்டித்துள்ளார். 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ஆராத்யாவை கேலி செய்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. இதை என்னால் சாதாரணமாக கடந்து போகவும் முடியாது. நான் பிரபலமாக இருப்பதால் விமர்சனங்களை எதிர்கொள்வது தவிர்க்க முடியாது. ஆனால், என் மகள் இதில் சேரமாட்டாள். அவளை கேலி செய்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆராத்யாவை கேலி செய்பவர்கள் தைரியம் இருந்தால் என் முகத்துக்கு நேராக நின்று பேசுங்கள்” என்றார்.

மேலும் செய்திகள்