ஜீவா படத்தில் இருந்து 13 காட்சிகள் நீக்கம்

ஜீவா நடித்த ‘வரலாறு முக்கியம்’ படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து 13 காட்சிகளை வெட்டி நீக்கி விட்டனர்” என்றார்.;

Update: 2022-12-04 06:04 GMT

ஜீவா 'வரலாறு முக்கியம்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரக்யா நாயகியாக வருகிறார். இந்த படத்தில் இருந்து சர்ச்சை காட்சிகளை தணிக்கை குழு நீக்கி உள்ளது. இதுகுறித்து ஜீவா அளித்துள்ள பேட்டியில், ''நான் புதுமுக டைரக்டர்கள் படங்களில் நடிக்க முக்கியத்துவம் கொடுக்கிறேன். எனது முந்தைய பல படங்களை புதிய டைரக்டர்கள்தான் இயக்கி உள்ளனர். தற்போது நான் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தையும் புது இயக்குனரான சந்தோஷ் ராஜன் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் நான் யூடியூப்பர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். சிவா மனசில சக்தி படம் மாதிரி கலகலப்பான ஜாலியான படமாக இருக்கும். 30 வயதில் நமக்கு என்ன உணர்வுகள் வருமோ அதே உணர்வு நமது அப்பா, தாத்தா போன்றோருக்கும் ஏற்பட்டு இருக்கும். அந்த விஷயங்களும் மற்றும் குடும்ப உறவுகள், நகைச்சுவை, காதல் போன்றவையும் படத்தில் இருக்கும். இந்த படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பினோம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து 13 காட்சிகளை வெட்டி நீக்கி விட்டனர்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்