திருவானைக்காவல் கோவிலில் ரூ. 1கோடியில் புதிய கொடிமரங்கள்


திருவானைக்காவல் கோவிலில்  ரூ. 1கோடியில் புதிய கொடிமரங்கள்
x

விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது

ஸ்ரீரங்கம்,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுவாமி சன்னதி பிரதான கொடிமரம் மற்றும் 3ம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலய பூஜை நேற்று நடந்தது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உள்ள மூன்றாம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் உள்ள அஷ்டதிக்கு கொடி மரங்களுக்கும் மற்றும் சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரத்தையும் புதிதாக நிர்மாணிப்பதற்கென புதிய கொடிமரத் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலயம் விழா நேற்று காலை நடந்தது.

முன்னதாக விக்னேஷ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனைகள் செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து குடங்கள் புறப்பட்டன. பின்னர் பாலாலயத்திற்காக உள்ள சித்திர பிம்பங்களுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. இந்த அஷ்டதிக்கு கொடி மரங்கள் மற்றும் சுவாமி சன்னதி பிரதான கொடி மரம் ஆகியவை சுமார் ஒரு ரூ. 1கோடி மதிப்பில் செய்யப்படவுள்ளது, இந்தப் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவுபெறும் என்று கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story