வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது

தேனி

ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையில் இருந்து ஜூன் மாத தொடக்கத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்தில் 12 அடி குறைந்தது.

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி தற்போது நீர்வரத்து வினாடிக்கு 1,510 கனஅடியாக உள்ளது. பாசனம், குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 869 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story
  • chat