வைகை அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு


வைகை அணையில் கூடுதலாக தண்ணீர் திறப்பு
x

தேனி மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்ததால் வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது

தேனி

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்தது. இதையடுத்து வைகை அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக திறந்து விடப்பட்டது. அதன்படி வினாடிக்கு 1,190 கனஅடி தண்ணீர் வைகை அணையின் பிரதான மதகுகள் வழியாக திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு படிப்படியாக உயர்ந்து நேற்று மாலை வினாடிக்கு 2,152 கனஅடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இன்று அதிகாலை வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,200 கனஅடியாக அதிகரித்தது. இதைத்தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றமும் 3,200 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மதியம் 1 மணியளவில் தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 754 கன அடியாக உயர்த்தப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தினர்.


Next Story
  • chat